நானுஓயா கிளாரண்டன் பிரதேச பாடசாலை மாணவர்களுக்கான பாடசாலை கற்றல் உபகரணங்கல் வழங்கும் நிகழ்வு (28) வெள்ளிக்கிழமை மாலை கிளாரண்டன் கலாச்சார மண்டபத்தில் ( Hope For Children ) என்ற நிகழ்ச்சி திட்டத்தின் அனுசரனையின் பிலிவர்ஸ் ஈஸ்டன் கிறிஸ்தவ ஆலயத்திற்கு பொறுப்பான அருட்தந்தை மகேஸ்வரன் தலைமையில் வழங்கப்பட்டது .
இதன் போது கல்விகற்கும் 250 மாணவர்களுக்கு அவர்களின் நலன் கருதி அப்பியாசகொப்பி , பேனை , பென்சில் , பாடசாலை பாதணி என பல பொருட்கள் அடங்கிய 8 ஆயிரம் பெறுமதியான கற்றல் உபகரணங்கல் என்பன வழங்கி வைக்கப்பட்டது .
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பிலிவர்ஸ் ஈஸ்டன் கிறிஸ்தவ ஆலய நிர்வாக தலைவர் அருட்தந்தை கல்யாணப்பிரிய , கிளாரண்டன் தோட்ட முகாமையாளர் , நுவரெலியா பிரதேச செயலாளர் , நானுஓயா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.சி ஜானக்க , கார்லபேக் பாடசாலை அதிபர் விஜயகுமார் , நு/ எபட்ஸ்போட் பாடசாலை அதிபர் கலைச்செல்வன் ,குழந்தைகள் மேம்பாட்டு அதிகாரி வினிசீயா (Nope for children ) நானுஓயா மற்றும் ஆசிரியர்கள் , பெற்றோர்கள் என பலரும் பங்குபற்றியிருந்தனர்.
டி.சந்ரு செ.திவாகரன்