மஹியாங்கனை பகுதியிலிருந்து அட்டன் பகுதிக்கு 3 கியூப் மணல் ஏற்றிச்சென்ற லொறி ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
நுவரெலியா – அட்டன் பிரதான வீதியில் நானுஓயா குறுக்கு வீதியில் குறித்த லொறி வீதியை விட்டு விலகி மண்மேடில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
04.04.2018 அன்று இரவு 11 மணியளவில் இவ் விபத்து நேர்ந்துள்ளதாக நானுஓயா போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.
லொறி சாரதி லொறியின் வேகத்தை கட்டுப்படுத்த முயன்றபோது கட்டுப்பாட்டுக்கு அப்பால் லொறி வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.
லொறியில் சாரதி மட்டும் பயணித்துள்ளதாகவும், அவர் பலத்த காயங்களுக்குள்ளாகி நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
க.கிஷாந்தன், மு.இராமச்சந்திரன்- டி.சந்த்ரு