நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டெஸ்போட் தோட்டம் ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தின் வீதியோரத்தில் அமைக்கப்பட்டிருந்த வழிப்பிள்ளையாருக்கு முன் வைக்கப்பட்டிருந்த உண்டிய உடைத்து பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது.
இரவு 11 30 அலவிள் சத்ம் கேட் டு கோவிலுக்கு சென்று பார்த்தபோது உண்டியல் திருட்டு போயிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து இதுகுறித்து ஆலய நிர்வாகத்திடம் தெரிவித்து நானுஓயா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது .
இவ் திருட்டு சம்பவம் கடந்த சனிக்கிழமை அதிகாலையில் இடம்பெற்றுள்ளதாகவும், அத்தோடு சந்தேகத்தின் பேரில் இப்பிரதேசத்தில் வசிக்கும் 10 மற்றும் 16 வயதுடைய இரு சிறுவர்களிடம் விசாரணைகளை மேற்கொண்ட போது உண்டியலை உடைத்து காணிக்கைப் பணத்தைத் திருடியதாக ஒப்புக்கொண்டதாகவும் , இப்பணத்தினை அவ் சிறுவர்களின் பெற்றோர்கள் பொலிஸ் நிலையத்தில் வைத்து கோவில் நிர்வாகத்திடம் கையளிப்பு செய்வதாக ஒப்புக்கொண்டதா நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணகைளை நானுஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இது இவ்வாறிருக்க, கடந்த ஒரு வாரமாக நுவரெலியா , லிந்துலை, நானுஓயா ஆகிய பொலிஸ் பிரிவுகளிற்குட்பட்ட பல பகுதிகளிலுமுள்ள இந்துக் கோவில்கள் உடைக்கப்பட்டு அங்கிருந்த உண்டியல் பணமும், அம்மனுக்கு அணிவிக்கப்பட்டிருந்த தங்க ஆபரணங்களும் திருடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது .
டி சந்ரு