நானுஓயா மெனிக் ஆடைத் தொழிற்சாலை தொடர்பில் நுவரெலியா கூட்டத்தில் விவாதம்

0
180

 

1999ஆம் ஆண்டில் நானுஓயா மெனிக் ஆடைத் தொழிற்சாலை தனிநபர் ஒருவரால் குத்தகைக்கு பெறப்பட்டிருந்தது. இக்குத்தகைக் காலமானது 2002ம் ஆண்டுடன் நிறைவு பெற்றிருந்த போதிலும் அவர் அதை திரும்ப ஒப்படைக்கவில்லை.

இது தொடர்பாக கடந்த காலங்களில் நுவரெலியா மாவட்ட அபிவிருத்திக் குழுக்கூட்டங்கள் மற்றும் பிரதேச அபிவிருத்திக் குழுக்கூட்டங்களில் கலந்துரையாடப்பட்டது.

எனினும் இது தொடர்பான ஆவணம் நுவரெலியா பிரதேச சபையில் இல்லை என்றே அறியப்பட்டது.

இன்று காலை 6:30 நுவரெலியா பிரதேச சபையின் விசேட கூட்டம் நானுஓயா காரியாலயத்தில் நடைப்பெற்றது.

இதன்போது நானுஓயா நகர் பகுதியில் தனி நபர் ஒருவரால் குத்தகை முறையில் தொழில் செய்துவந்த கட்டிடம் மற்றும் காணி குத்தகை காலம் முடிந்தும். கட்டிடத்தை பிரதேச சபை வசம் மீண்டும் ஒப்படைக்காமல் இருந்தமையால் இன்று காலை நுவரெலியா பிரதேச சபை தலைவர் மற்றும் அதன் உறுப்பினர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து கட்டிடம் மற்றும் காணியை கைப்பற்றியது.

 

டீ. சந்ரு –

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here