நான்காவது அணியாக பிளே ஓஃப் சுற்றுக்குள் நுழைந்தது கொழும்பு ஸ்டார்ஸ் அணி!

0
193

லங்கா பிரீமியர் லீக் இருபதுக்கு-20 தொடரின் 20ஆவது லீக் போட்டியில், கொழும்பு ஸ்டார்ஸ் அணி 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.

இந்த வெற்றியின் மூலம் கொழும்பு ஸ்டார்ஸ் அணி நான்காவது அணியாக பிளே ஓஃப் சுற்றுக்குள் நுழைந்துள்ளது.

கொழும்பு- ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், கொழும்பு ஸ்டார்ஸ் அணியும் கண்டி வோரியஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற கண்டி வோரியஸ் அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய கொழும்பு ஸ்டார்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 182 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, குசல் பெரேரா 58 ஓட்டங்களையும் சந்திமால் ஆட்டமிழக்காது 44 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

கண்டி வோரியஸ் அணியின் பந்துவீச்சில், நிமேஷ் விமுக்த்தி 3 விக்கெட்டுகளையும் அல்-அமீன் மற்றும் கொலம்பகே ஆகியோர் தலா 1 விக்கெட்டினை வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 183 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய கண்டி வோரியஸ் அணி, 17 ஓவர்கள் நிறைவில் 124 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதனால் கொழும்பு ஸ்டார்ஸ் அணி 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ரவி பொபாரா 47 ஓட்டங்களையும் கென்னர் லீவிஸ் 21 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

கொழும்பு ஸ்டார்ஸ் அணியின் பந்துவீச்சில், ஜெப்ரி வெண்டர்சே 6 விக்கெட்டுகளையும் சீக்குகே பிரசன்ன 2 விக்கெட்டுகளையும் நவீன் உல் ஹக் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக, 6 விக்கெட்டுகளை வீழ்த்திய ஜெப்ரி வெண்டர்சே தெரிவுசெய்யப்பட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here