ஆயிரம் ருபா அடிப்படை சம்பளத்தை வழியுருத்தி மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களால் முன்னெடுக்கபட்டு வருகின்ற பணிபுறக்கணிப்பு மற்றும் ஆர்பாட்டங்களானது நான்காவது நாளாகவும் இடம் பெற்றுவருகின்றது.
இந்நிலையில் 07.12.2018. வெள்ளிகிழமை காலையில் இருந்து அட்டன் பகுதியில் உள்ள தோட்ட
தொழிலாளர்கள் பாரிய ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதாவது தோட்ட தொழிலாளர்களாகிய எங்களுக்கு ஆயிரம் ரூபா அடிப்படை சம்பளத்தினை முதலாளிமார் சம்மேளனம் கட்டாயம் வழங்கபட வேண்டும் என வழியுருத்தி டயர்களை எரித்தும் பாரிய ஆர்பாட்டம் ஒன்று அட்டன் பகுதியில் முன்னெடுக்கபட்டது
தோட்ட தொழிலாளர்களுடைய ஆயிரம் ரூபா அடிப்படை சம்பளம் விடயம் தொடர்பிலான
பேச்சிவார்தை இனக்கபாடு இன்றி நிறைவடைந்துள்ள நிலையில் முதலாளிமார்
சம்மேளனம் 600ரூபா விற்கு மேல் அடிப்படை சம்பளத்தினை அதிகரிக்க முடியாது
என்ற தீர்மானத்திற்கு வந்த பிறகே இலங்கை தொழிலாளர் காங்ரசினால் மலையக
முழுவதும் பணிபுறக்கணிப்பு முன்னெடுக்கபட்டு வருகின்றது.
இந்த பணிப்புறக்கணிப்பானது நான்காவது நாளாகவும் இடம் பெற்றுகொண்டிருக்கின்ற
வேலை மாற்று தொழிசங்கங்களை சார்ந்த சிலர் பணிபுறக்கணிப்பை புறக்கணித்து
பணியில் ஈடுபட்டு வருகின்றமையும் குறிப்பிடதக்கது
இதன் அடிப்படையில் மேலதிக கொடுப்பணவுகளை அனைத்தும் சேர்த்து அடிப்படை
சம்பளம் 600ரூபா உட்பட நாள் ஒன்றும் 1020ரூபா மாத்திரம் வழங்க முடியும்
என முதலாளிமார் சம்மேளம் அறிவித்துள்ளமை குறிப்பிடதக்கது.|
பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்