அனர்த்தத்தில் பாதிக்கபட்டவர்களை பார்க்க வருவோர் அனுதாபம் காட்ட மாத்திரம் வராமல் ஒரு வேளை உணவாவது கொண்டு வாருங்கள் கம்பளை பிரதேசத்தில் மண்சரிவு அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட பெண்னொருவர் கண்ணீர் மல்க கோரிக்கை விடுக்கும் காணொலியொன்று முகநூலில் பேசுபொருளாக மாறியுள்ளது.
அந்த காணொலியில் அவர், தங்களுக்கு உணவு சமைப்பதற்கான வசதிகள் கூட வசதி இல்லாமல் போயிருப்பதாகவும், இவ்வாறான நிலைமைக்கு மத்தியில் வருகின்ற நிவாரண பொதிகளில் நான்கு – ஐந்து பேர் இருக்கின்ற வீடுகளுக்கும் ஒரு பற் தூரிகை மற்றும் சிறியதொரு பிஸ்கட் பக்கட் மட்டுகே இருப்பதாகவும் அவர் கவலை தெரிவித்துள்ளார்.
இவ்வாறு நிவாரணங்களை பகிரும் அதிகாரிகளின் வீடுகளில் நிவாரண பொருட்கள் நிரம்பிக் கிடப்பதாகவும், உணவின்றி தவிக்கும் மக்களுக்கு அவற்றை பகிர்ந்தளிக்க வேண்டும் என்றும் குற்றம்சாட்டினார். மக்கள் படுகின்ற கஷ்டங்களை கிராம உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.




