நாட்டில் நிலவிவரும் சீரற்ற காலநிலையினை தொடர்ந்து மத்திய மலைநாட்டில் கணத்த மழை பெய்துவருகிறது. நீரேந்தும் பிரதேசங்களில் பதிவாகிவரும் அதிக மழைவீழ்ச்சியினை தொடர்ந்து நீர்த்தேக்கங்களின் நீர்மட்டங்கள் சடுதியாக உயர்ந்து வருகின்றன.
இதனைத்தொடர்ந்து இன்று அதிகாலை வேளையில் மௌசாக்கலை நீர்த்தேக்கத்தின் மூன்று வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.தற்போது இரண்டு வான்கதவுகள் மூடப்பட்டுள்ளதாகவும் ஒரு வான்கதவு மாத்திரம் தொடர்ந்தும் திறந்துள்ளதாகவும மின்சாரசபை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
எனவே இந்த நீர்த்தேக்கங்களுக்கு கீழ்பகுதியில் வாழும் தாழ்நில மக்கள் அவதானமாக இருக்குமாறு மேலும் அவர் கேட்டுக்கொண்டார்.
இதேவேளை காசல்ரீ, கனியோன், லக்ஸபான , நக லக்ஷபான பொல்பிட்டிய ஆகிய நீர்த்தேக்கங்களின் நீர்மட்டமும் வான்பாயும் அளவினை எட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கே.சுந்தரலிங்கம்