நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக நாட்டில் பல்வேறு பிரதேசங்களில் கடந்த நான்கு வருடங்களுக்கு மேலாக அபிவிருத்தி பணிகள் தடைப்பட்டன. இந்த அபிவிருத்தி பணிகளை துரிதப்படுத்துவதற்கு அதிமேதகு ஜனாதிபதி அவர்கள் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான ஜீவன் தொண்டமான் மற்றும் நுவரெலியா பாராளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஸ்வரன் அவர்களின் ஆலோசனைக்கமை அக்கரபத்தனை பிரதேச சபையின் அபிவிருத்தி குழு பொறுப்பாளராக தன்னை நியமித்திருப்பதாகவும் இந்த பணியை செவ்வனே நிறைவேற்றுவதற்கு தான் கடமைப்பட்டுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவர் பிரதேச சபை அபிவிருத்தி பொறுப்பாளருமான சச்சிதானந்தன் தெரிவித்தார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களின் ஆலோசனைக்கமைய பிரதேச அபிவிருத்தி பொறுப்பாளர்களாக அண்மையில் மத்திய மாகாண சபை ஆளுநர் லலித்யு கமகே அவர்களால் நியமனங்கள் கற்றுக் கொடுக்கப்பட்டன.
இந்த நியமனத்திற்கமைய இன்று 03 திகதி அக்கரபத்தனை பிரதேச சபையின் அபிவிருத்தி பொறுப்பாளராக கடமையேற்று கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் கடந்த காலத்தில் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அபிவிருத்தி பணிகள் முடங்கின அப்போது இந்த இந்த நாட்டினை பொறுப்பேற்றுக் கொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் மக்களின் பணியினையும் உணவு தேவையினை பூர்த்தி செய்வதற்கு முக்கிய துவமளிதார் தற்போது நாடு சுமுகமான நிலைக்கு திரும்பியுள்ளது சர்வதேச நாணய நிதியமும் மக்களின் அத்தியாவசிய அபிவிருத்தி பணிகளை மேற்கொள்வதற்கு தேவையான நிதியையும் பெற்றுக் கொடுத்துள்ளது இப்போது துரித கதியில் மக்களின் அபிவிருத்திகளை மேற்கொள்வதற்கு தேவையான நடவடிக்கைகளை கௌரவ ஜனாதிபதி அவர்கள் எடுத்து வருகிறார் இதனால் மலையகத்தில் தடைப்பட்டு கிடந்த அபிவிருத்தி பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகிறது கடந்த காலங்களில் போக்குவரத்தில் பாரிய பிரச்சினைக்கு முகம் கொடுத்து வந்த அக்கரபத்தனை போடைஸ் வீதி தற்போது காபட் செய்யும் பணிகள் ஆரம்பித்துள்ளன அதே போன்று நாகசேன தலைவாக்கலை ஊடான வீதியும் காபட் இடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கடந்த காலத்தில் உங்களுக்கு தெரியும் இந்த வீதிகள் சீரின்மை காரணமாக பல விபத்துகள் ஏற்பட்டுள்ளன இதனால் பலர் போராட்டங்களை மேற்கொண்டார்கள் இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு இந்த பணிகளை முன்னெடுப்பதற்கு தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அது மாத்திரமின்றி இந்திய வீடமைப்பு திட்டங்கள் தற்போது ஆரம்பிக்கப்பட்டு அந்த வேலையும் போய்க்கொண்டிருக்கிறது அத்தோடு மலையக பகுதியில் தோட்டப்புறங்களில் செல்லும் பாதைகள் குடிநீர்,மின்சாரம் உள்ளிட்ட பல அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் இன்று 1700 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது அதனை வழங்க முடியாது என்று கம்பனிகள் நீதிமன்றம் சென்று தடை உத்தரவு கேட்ட போது அதனை நீதிமன்றம் வழங்காது நிராகரித்துள்ளது எனவே தோட்டத்தொழிலாளர்களுக்கு 1700 சம்பளம் கம்பனிகள் பெற்றுக்கொடுக்க வேண்டும் அவ்வாறு இல்லாத பட்சத்தில் கம்பனிகளுக்கு எதிராக வரலாறு காணாத எதிர்ப்புக்கள் நடைபெறும் எனவும் இலங்கை தொழலாளர் காங்கிரஸ் எப்போது மக்களின் நலனில் அக்கறை கொண்டு செயப்படுவதனால் மக்களுக்கு யார் நம்மை செய்கிறார்களோ அவர்களை ஆதரித்து வந்துள்ளது என்றும் அவர் இதன்போது மேலும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் முன்னாள் அக்கரபத்தனை பிரதேச சபையின் தலைவர் இரா. கோபால் கலந்து கொண்டு இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
மலைவாஞ்ஞன்