ஒன்பதாவது பாராளுமன்றத்தின் நான்காவது அமர்வு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.ஒன்பதாவது பாராளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடரை ஆரம்பித்து வைத்து ஜனாதிபதி அரசாங்கத்தின் கொள்கை அறிக்கையை முன்வைக்கிறார்.
ஜனாதிபதியின் உரையின் பின்னர் பாராளுமன்றம் ஒத்திவைக்கப்படும் என சார்ஜன்ட் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
வரிவிதிப்புக்கான புதிய கொள்கைகளை அறிமுகப்படுத்துவது அரசியல் ரீதியாக விரும்பத்தகாத முடிவு என்று ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.
“சமீப காலமாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளினால் நாட்டு மக்களின் அழுத்தத்தை கொஞ்சம் கொஞ்சமாக குறைக்க முடிந்தது. தற்போது பொருளாதாரம் ஓரளவு ஸ்திரமாகிவிட்டது. மக்கள் சற்று ஆறுதல் அடைந்துள்ளனர். இலங்கையை பாதுகாப்பான தூரத்திற்கு கொண்டு வர முடிந்தது. இந்தப் பயணம் இலேசானது ஒன்றல்ல.. ஆனால் பயணம் இன்னும் முடிவடையவில்லை, வீழ்ச்சியின் விளிம்பில் இருந்த அரசாங்கம், நிதி அமைப்பைப் பாதுகாப்பதில் உறுதியாக உள்ளது…
“நினைவில் கொள்ளுங்கள், நான் பிரபலமாக இருக்க இங்கு வரவில்லை.. இந்த நாடு விழுந்துள்ள நெருக்கடியிலிருந்து மீண்டும் கட்டியெழுப்ப விரும்புகிறேன். ஆம், மக்கள் விரும்பத்தகாத முடிவுகள் நாட்டின் நலனுக்காக எடுக்கப்படுகின்றன. அந்த முடிவுகளின் முக்கியத்துவத்தை பலர் இரண்டு அல்லது மூன்று வருடங்களில் புரிந்துகொள்வார்கள். வரிக்கு உட்பட்ட வருமான வரம்பு ஒரு இலட்சத்தில் இருந்து இரண்டு இலட்சம் வரைக்கும் உயர்த்தப்பட வேண்டும் என சிலர் கூறுகின்றனர். சம்பாதித்தவுடன் செலுத்தும் வரி முறை ஒழிக்கப்பட வேண்டும் என சிலர் கூறுகின்றனர். இந்த வரிகள் விருப்பத்திற்கு ஏற்ப விதிக்கப்பட்டவை அல்ல. நாங்கள் விரும்பியதை செய்து நாட்டினை முன்னேற்ற முடியாது….”