வாஷிங்டன்: ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதால் நான் மகிழ்ச்சியாக இல்லை என்பது பிரதமர் நரேந்திர மோடிக்கு தெரியும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் புளோரிடாவில் இருந்து தலைநகர் வாஷிங்டன் செல்லும்போது, ‘ஏர் போர்ஸ் ஒன்’ விமானத்தில் நிருபர்களுக்கு அதிபர் ட்ரம்ப் பேட்டியளித்தார். அப்போது ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவது குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.




