நாம் யாரென உணர்த்துவோம்.அனைவரும் அணிதிரளுங்கள் அழைக்கின்றார் லெட்சுமனார் சஞ்சய்.

0
197

நாட்டில் தற்போது அதிவுச்ச நிலையை அடைந்திருக்கும் பொருளாத நெருக்கடி ஒட்டுமொத்த மக்களையும் வாட்டி வதைத்து கொண்டிருக்கின்றது.திறன் இல்லாத ஜனாதிபதி, நிலையில்லாத அரசாங்கம், பொருட்களின் தட்டுபாடு,மக்களை குழிக்குள் தள்ளும் விலைவாசி உயர்வு என அனைத்துக்கும் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் 9ம் திகதி கொழும்பில் ஒன்று கூடும் எதிர்பு ஆர்ப்பாட்ட பேரணியில் ஓருதாய் மக்களாய் ஒன்றிணைவோம் என மலையக தொழிலாளர் முன்னணியின் அமைப்பு செயலாளர் லெட்சுமேனார் சஞ்சய் அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த போராட்டம் அரசியலாக இருக்க கூடாது அரசியல் மயமாக்கவும் கூடாது. இது மக்கள் போராட்டம்.அன்றாடம் உதிரத்தை வியர்வையாக்கி தன் குடும்பத்தை காக்க நினைக்கும் ஒவ்வொரு குடிமகனும் நாட்டை காக்க ஒன்று திரள வேண்டும்.இனி இவர்களை நம்பியும் இவர்கள் கூறும் பொய்யை நம்பியும் ஒன்றும் செய்ய முடியாது.மக்கள் நாம் முட்டாள் அல்ல என்பதை நிரூபிப்போம்.எனவே அனைவரும் இன,மத பேதமின்றி ஒரு தாய் மக்களாய் ஒன்பதாம் திகதி ஓரணியில் ஒன்று திரள்வோம் என லெட்சுமனார் சஞ்சய் அழைப்பு விடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here