போஞ்சி, கரட், தக்காளி, எலுமிச்சை , பச்சை மிளகாய் ஆகியவற்றின் விலைகள் கணிசமாக அதிகரித்துள்ளது. சந்தையில் மரக்கறிகளின் விலைகள் வேகமாக அதிகரித்துள்ளதாக நுகர்வோர்கள் குற்றம் சுமத்தி வருகின்றனர்.
அதன்படி போஞ்சி, கரட், தக்காளி, எலுமிச்சை , பச்சை மிளகாய் ஆகியவற்றின் விலைகள் கணிசமாக அதிகரித்துள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
நாரஹேன்பிட்ட பொருளாதார நிலையத்தில் போஞ்சி ஒரு கிலோகிராம் 440 ரூபாயாகவும், கரட் ஒரு கிலோகிராம் 480 ரூபாயாகவும், கோவா ஒரு கிலோகிராம் 380 ரூபாயாகவும், தக்காளி ஒரு கிலோகிராம் 320 ரூபாயாகவும், கத்தரிக்காய் ஒரு கிலோகிராம் 400 ரூபாயாகவும், உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் கிழங்கு ஒரு கிலோகிராம் 480 ரூபாயாகவும், எலுமிச்சை ஒரு கிலோகிராம் 1000 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் 800 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.
பொதுச் சந்தையில் போஞ்சி ஒரு கிலோ 450 ரூபாய் முதல் 500 ரூபாய் வரையிலும், கரட் ஒரு கிலோ 500 முதல் 600 ரூபாய் வரையிலும், கோவா ஒரு கிலோ 420 ரூபாய்க்கும், தக்காளி ஒரு கிலோ 350 ரூபாய்க்கும்,கறி மிளகாய் ஒரு கிலோ 750 ரூபாய்க்கும், ஒரு கிலோ கத்தரிக்காய் 480 ரூபாயாகவும், வெண்டிக்காய் ஒரு கிலோ 340 ரூபாயாகவும், முருங்கைக்காய் ஒரு கிலோ 900 ரூபாயாகவும், பாகற்காய் ஒரு கிலோ 860 ரூபாயாகவும், எலுமிச்சை ஒரு கிலோ 1100 ரூபாயாகவும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 900 ரூபாவாகவும் உள்ளதாக வாடிக்கையாளர்கள் தெரிவிக்கின்றனர்.