நாளை நள்ளிரவு முதல் உயர்தர வகுப்புகளுக்குத் தடை

0
150

இந்த வருடம் பரீட்சைக்குத் தோற்றவுள்ள, கல்விப் பொதுத் தாரதர உயர்தர மாணவர்களுக்காக நடத்தப்படும் அனைத்து தனியார் வகுப்புகளுக்கும் நாளை நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் தடை விதிக்கப்படுவதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

நாளை நள்ளிரவு முதல் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி வரை இந்தத் தடை அமுலில் இருக்குமென பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தரம் ஐந்து புலமைப்பரிசில் மாணவர்களுக்கான அனைத்து தனியார் வகுப்புகளுக்கும் எதிர்வரும் முதலாம் திகதி முதல் பரீட்சைகள் நிறைவுபெறும் வரை தடை விதிக்கப்படுவதாகவும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவிக்கின்றது.

தனியார் மற்றும் மேலதிக வகுப்புகளை நடத்துவது, பாடவிதானங்களுடன் தொடர்புடைய கருத்தரங்குகளை நடத்துதல், பரீட்சை முன்மாதிரி வினாக்களை அச்சடித்து வெளியிடல், பரீட்சை தொடர்பில் சுவரொட்டிகளை ஒட்டுதல், கையேடுகளை விநியோகித்தல், அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்கள் ஊடாக பரீட்சை வினாக்கள் தொடர்பில் கருத்துக்களை வெளியிடல் ஆகிய செயற்பாடுகளுக்கு குறித்த காலப்பகுதியில் முற்றாக தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேற்சொன்ன இந்த விடயங்களை மீறிச் செயற்படும் தனிநபர்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு எதிராக பொது பரீட்சைகள் சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென பரீட்சைகள் திணைக்களம் தெரிவிக்கின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here