ஆசிரியர் விடுதலை முன்னணி தமது அங்கத்தவர்களின் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு எதிர்வரும் (5) சனிக்கிழமை காலை 10 மணிக்கு நுவரெலியா புனித சவேரியார் கல்லூரி மண்டபத்தில் நடைபெறவுள்ளதாக அதன் செயலாளர் நாயகம் என்.டி.எஸ்.நாதன் தெரிவித்துள்ளார்.
வருடா வருடம் இந்நிகழ்வு மிகச் சிறப்பாக நடாத்தப்பட்டு வருகின்றது. அந்தவகையில் இவ்வருடமும் இந்நிகழ்வுகள் மிகச் சிறப்பாக முன்னெடுக்கப்படவுள்ளன.
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் பெற்று சித்தியடைந்த முன்னணியின் அங்கத்தவர்களின் பிள்ளைகளுக்கும் அதேபோல க.பொ.த.சாதாரண தர பரீட்சையில் சித்தியடைந்த முன்னணியின் அங்கத்தவர்களின் பிள்ளைகளுக்கும் பல்கலைக்கழகங்களில் கல்வி பயிலும் முன்னணியின் அங்கத்தவர்களின் பிள்ளைகளுக்கும் இப்புலமைப்பரிசில்கள் வழங்கப்படவுள்ளன.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக நுவரெலியா வலயக் கல்விப் பணிப்பாளர் லசந்த அபேரட்ண, விசேட அதிதியாக உதவி கல்விப் பணிப்பாளர் கணேஸ்ராஜ் ஆகியோர் கலந்துக்கொள்ளவுள்ளனர். இந்நிகழ்வுக்கு அதிபர்,ஆசிரியர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்பதாக என்.டி.எஸ்.நாதன் மேலும் தெரிவித்துள்ளார்.
டி சந்ரு