நாளை பாடசாலைகளுக்கு விஷேட விடுமுறை!

0
194

இந்துக்களின் புனித நாளான ஆடிஅமாவாசை விரதம் இவ்வருடம் நாளைமறுதினம்(28) வரும் வியாழக்கிழமையாகும்.இந்நிலையில் அந்நாளில் தந்தையை இழந்த இந்து ஆசிரியர்கள் பிள்ளைகள் ஆடி அமாவாசை விரத்தை அனுஸ்டிக்க வசதியாக வியாழன் பாடசாலை நாளை புதன்கிழமை (27.07.2022) பதில் பாடசாலையாக நடாத்துவதற்கு பாடசாலையின் அதிபர்கள் வலயக் கல்விப் பணிப்பாளரிடம் அனுமதி பெற முடியும் என கல்வி அமைச்சு அனுமதித்துள்ளது.

அதேவேளை வெள்ளிக்கிழமை பாடசாலை நடைபெறாத நாள் என்பதால் தூர இடங்களில் கடமையாற்றும் ஆசிரியர்களுக்கும் அது வசதியாக அமையும்.

தற்போதைய போக்குவரத்து, எரிபொருள் பிரச்சனைகளைக் கருத்தில் கொண்டு இந்த ஒழுங்கை மேற்கொள்ளுமாறு அதிபர்களைத் தயவுடன் கேட்டுக்கொள்கின்றோம் என இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here