மத்திய மாகாண கல்வித் திணைக்களத்திற்குட்பட்ட அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் தீபாவளி திருநாளை முன்னிட்டு எதிர்வரும் 5.11.2018 திங்கட்கிழமை விடுமுறை வழங்கப்படும் என மத்திய மாகாண மேலதிக கல்விப் பணிப்பாளர் திருமதி ஏ.ஆர்.சத்தியேந்திரா தெரிவித்துள்ளார்.மத்திய மாகாண தமிழ் பாடசாலைகள் அனைத்துக்கும் மத்திய மாகாண ஆளுனரின் அனுமதிக்கிணங்கவே 5.11.2018 திங்கட்கிழமை விடுமுறை வழங்கப்படுவதுடன் இத்தினத்திற்கு பதிலாக அடுத்த வாரம் 10.11.2018 சனிக்கிழமையன்று அனைத்து பாடசாலைகளிலும் கற்பித்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என சகல அதிபர்களுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தலவாக்கலை பி.கேதீஸ்