நாளொன்றுக்கு 20 கிலோ கொழுந்து கேட்டமையினால் தோட்ட நிர்வாகத்திற்கு எதிராக பணி பகீஸ்கரிப்பு போராட்டம்.

0
162

கொட்டக்கலை பிளான்டேஷன் கீழ் இயங்கும் ஸ்மோல் ட்ரேட்டன் தோட்ட தொழிலாளர்கள் 07/06/2020 திங்கட்கிழமை பணி பகீஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த தோட்டத்தில் கடந்த சில வாரங்களாக தோட்ட நிர்வாகம் தொழிலாளர்களை 20 கிலோ கொழுந்து பறித்து தருமாறு கெடுபிடி விதித்தமையினால் அதனை எதிர்த்து பணி பகிஸ்கரிப்பில் குறித்த தோட்டத்தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த வாரமும் இதே பிரச்சனையில் இத்தோட்டத்தில் மூன்று நாட்கள் தொடர் பணி பகீஸ்கரிப்பு இடம்பெற்றது.மீண்டும் இப்பிரச்சனை இத்தோட்டத்தில் இடம்பெற்றதால் 20 கிலோ தெயிலை கொழுந்துகள் பறிக்க முடியாது 17 கிலோ கொழுந்து மாத்திரமே பறிக்க முடியுமென பறித்த கொழுந்தை கொழுந்து நிறுக்கும் மடுவத்திலேயே ஆங்காங்கு வைத்து விட்டு தோட்ட நிர்வாகத்திற்கு எதிராக பணி பகிஸ்கரிப்பை முன்னெடுத்துள்ளனர்.

இவ்வாறு தொடர்ச்சியான கெடுபிடிகளை தோட்ட நிர்வாகம் தோட்டத்தொழிலாளர்களுக்கு விதிக்குமிடத்து பாரிய போராட்டம் ஸ்மோல் ட்ரேட்டனில் இடம்பெறும் என குறித்த தோட்டத்தொழிலாளர்கள் தோட்ட நிர்வாகத்துக்கு எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நீலமேகம் பிரசாந்த்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here