நாவலபிட்டியில் மண்சரிவில் சிக்குண்ட இரண்டு சகோதரர்களில் ஒருவர் பலி!

0
186

நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோணவலபத்தன பகுதியில் வீடு ஒன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்ததில் சிக்குண்ட சகோதரர்கள் இருவரில் தம்பி காப்பாற்றப்பட்டுள்ளதோடு, அண்ணன் உயிரிழந்துள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

.

குறித்த இந்த சம்பவம் 05.05.2018 அன்று இரவு 8.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ள பொலிஸார், சகோதரர்கள் இருவர் தனது வீட்டின் விராந்தையில் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்த வேளையில் தீடிரென வீட்டின் அருகில் உள்ள மண்மேடு சரிந்து விழுந்துள்ளது.

slip (2)

இதில் மண்மேட்டில் சிக்குண்ட இருவரில் தம்பி ஒருவர் மயிரிழையில் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில் அண்ணன் மண்ணில் சிக்குண்டு ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். இவ்வாறு உயிரிழந்தவர் லஹிரூ கமகே வயது 20 என அடையாளம் காணப்பட்டுள்ளது.

Lahiru (3)

05.05.2018 அன்று மாலை முதல் நாவலப்பிட்டி பிரதேசத்தில் கடுமையான மழை பெய்துள்ளது. இந்த மழையினால் ஏற்பட்ட அனர்த்தமே இந்த உயிரிழப்புக்கு காணரம் என கண்டறயிப்பட்டுள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

அதேவேளையில் உயிருடன் மீட்கப்பட்ட தம்பி சிறு காயங்களுக்குள்ளாகிய நிலையில் நாவலப்பிட்டி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு வீடு திரும்பியுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

சீரற்ற காலநிலை நிலவுவதனால் மண்சரிவு அபாயங்கள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் இதனால் மக்களை மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு பொலிஸார் அறிவுறுத்தல் விடுத்துள்ளனர்.

(க.கிஷாந்தன்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here