நாவலபிட்டி மகாவலி கங்கைக்கு நீராட சென்ற இளைஞன் ஒருவன் சடலமாக மீட்கபட்டுள்ளதாக நாவலபிட்டி பொலிஸார் தெரிவித்தனர் இந்த சம்பவம் 08.12.2018.சனிகிழமை மாலை வேலையில் இடம் பெற்றதாக நாவலபிட்டி பொலிஸார்
மேலும் தெரிவித்தனர்
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது குறித்த இளைஞனின் வீட்டுக்கு காலிபகுதியில் இருந்து வருகை தந்திருந்த உறவினர்ளோடு மாலை மகாவலி கங்கைக்கு நீராட சென்ற போது நாவலபிட்டி வரக்காவ பகுதயில் ஆழமான பகுதியில் நீராட
இரண்டு இளைஞர்களும் ஒரு சிறுமியும் நீராட முற்பட்டபோது மகாவலி கங்கையின் நீரில் மூன்றுபேரையும் அடித்து கொண்டு சென்றதை இனங்கண்ட பொதுமக்கள் குறித்த காலிபகுதியை சேர்ந்த சிறுமியையும் இளைஞனையும் உயிருடன்
மீட்டெடுத்துள்ளதோடு நாவலபிட்டி பலலேகம பகுதியை சேர்ந்த 20வயதுடைய ரஞ்சித்குமார் என்ற இளைஞனே இவ்வாறு சடலமாக மீட்கபட்டுள்ளதாக நாவலபிட்டி பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
சம்பவத்தில் பலியான இளைஞனின் சடலம் நாவலபிட்டி மாவட்ட வைத்தியசாலையின் பிரதே அறையில் வைக்கபட்டுள்ளதோடு சம்பவம் தொடர்பில் மரண விசாரனைகளுக்காக கம்பளை நீதிமன்ற நீதவான் தலைமையில் மரண விசாரணைகள் நிறைவடைந்தவுடன் சட்டவைத்திய அதிகாரியின் பிரேத பரிசோதனையின் பின் சடலம் உறவினர்களிடம்
கையளிக்கபட உள்ளதாக நாவலபிட்டி பொலிஸார் தெரிவித்தனர் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை நாவலபிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது
(பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்)