நாவலபிட்டி மாவெளி கங்கையில் நீராட சென்ற பாடசாலை மாணவன் ஒருவர் நீரில் மூழ்கி பலியாகியுள்ளதாக நாவலபிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் 13.01.2019.ஞாயிற்றுகிழமை 12மணி அளவில் இடம்பெற்றதாக நாவலபிட்டி பொலிஸார் மேலும் தெரிவித்தனர்
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது தனது நண்பர்களோடு ஐந்த பேர் மாவெளி
கங்கையில் நீராட சென்ற போது அதில் மூன்று பேர் முதலில் நீராட சென்ற வேலை
மூன்று பேரை நீர் அள்ளுண்டு சென்றபோது அயலில் மேசன் தொழில் ஈடுபட்டு
கொண்டிருந்த ஒருவர் முவரையும் காப்பாற்றி வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற
வேலை அதில் ஒரு மாணவன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது வழியில்
உயிர் இழந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து
தெரியவந்துள்ளது
சம்பவத்தில் உயிர் இழந்த சிறுவன் கினித்தேன மத்திய மகாவித்தியாளயத்தில்
உயர் தரத்தில் கல்வி பயிலும் 18 வயதுடைய நாவலபிட்டி அப்புகஸ்தலாவ பகுதியை
சேர்ந்த விதுரஞ்சகன் இளங்கோவன் என்ற சிறுவனே இவ்வாறு உயிர் இழந்துள்ளதாக
பொலிஸார் மேலும் தெரிவித்தனர்
நாவலபிட்டி மாவெளி கங்கையில் ஐபோட் பகுதியிலே இவர்கள் நிராடியதாகவும்
பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் உயிர் இழந்த சிறுவனின் சடலம் நாவலபிட்டி மாவட்ட
வைத்தியசாலையின் பிரரேத அறையில் வைக்கபட்டுள்ளதோடு மரணவிசாரனைகள் இடம் பெற்று சட்டவைத்திய அதிகாரியின் மரண விசாரனையின் பின்னர் சடலம்
உறவினர்களிடம் ஒப்படைக்கபடும் என பொலிஸார் மேலும் தெரிவத்தனர்.
பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்)