நாவலப்பிட்டியவிலிருந்து நுவரெலியா மற்றும் பூண்டுலோயாவிற்கு செல்லும் பிரதான பாதையான ருவான்புர பகுதியில் மண்மேடு சரிந்து விழுந்ததோடு பாரிய மரமும் முறிந்து விழுந்ததால் போக்குவரத்துக்கு குறித்த பகுதியில் ஸ்தம்பிதமடைந்துள்ளது.
பலத்த மழையின் காரணமாக இச்சம்பவம் 10/11/2021 காலை 9 மணியளவில் இடம்பெற்றுள்ளது.இவ் மண்சரிவு காரணமாக பூண்டுலோயா மற்றும் நுவரெலியா பகுதியிலிருந்து செல்லும் வாகனங்கள் திருப்பியனுப்பட்டுள்ளதோடு நாவலப்பிட்டியவிலிருந்து இவ்வழியாக வரும் வாகனங்களும் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
நீலமேகம் பிரசாந்த், க.கிஷாந்தன்