நாவலப்பிட்டியில் 200 அடி பள்ளத்தில் பாய்ந்த வேன் – மூவர் காயம்

0
229

கம்பளையிலிருந்து நாவலப்பிட்டி நோக்கி சென்ற வேன் ஒன்று சுமார் 200 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.நாவலப்பிட்டி – கண்டி பிரதான வீதியின் நாவலப்பிட்டி கொன்தென்னாவ பகுதியில் 23.08.2018 அன்று இரவு இந்த விபத்து இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விபத்தில் வேனை செலுத்திய சாரதி மற்றும் மேலும் இரு நபர்கள் சிறு சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர்.

குறித்த சாரதிக்கு தூக்க கலக்கம் ஏற்பட்டதன் காரணமாகவே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக விசாரணைகளை மேற்கொள்ளும் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்து தொடர்பில் மேலதிக விசாரனைகளை நாவலப்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

க.கிஷாந்தன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here