நாவலப்பிட்டி கதிரேசன் மத்திய கல்லூரி மற்றும் கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயத்திற்கு இடையிலான உத்தியோகபூர்வ கடினப்பந்து கிரிக்கெட் சமருக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வு அண்மையில் நாவலப்பிட்டி கதிரேசன் மத்திய கல்லூரி கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இரண்டு பாடசாலைகளின் அதிபர்கள் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பழைய மாணவர் சங்க செயலாளர், உப செயலாளர் மற்றும் உறுப்பினர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்க உப செயலாளர், விளையாட்டுத்துறை ஆசிரியர்கள், மற்றும் இரு அணிகளின் தலைவர்களும் பங்கேற்றிருந்தனர்.
இதற்கமைய, உத்தியோகபூர்வ டெஸ்ட் கிரிக்கெட் போட்டி எதிர்வரும் அக்டோபர் 4 மற்றும் 5 ஆம் திகதிகளில் நாவலப்பிட்டி ஜெயதிலக்க விளையாட்டு மைதானத்தில் நடைபெற உள்ளது.
மேலும், இரண்டு பாடசாலைகளின் பழைய மாணவர் சங்கங்களுக்கிடையிலான விசேட கிரிக்கெட் போட்டியும் நடத்தப்படவுள்ளது.