நித்திரையின் போது உயிரிழந்த 4 வயதுச் சிறுமி : ஹொரணையில் சோகம்

0
176

களுத்துறை மாவட்டத்தின் ஹொரணை பகுதியில் நித்திரையில் இருந்த போது நான்கு வயது சிறுமியொருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சிறுமி வழமை போன்று நித்திரையிலிருந்துள்ளார். இதன்போது சிறுமி சிறுநீர் கழித்தமையினால் அவருக்கு வேறு உடை அணிவதற்காக தாய் சிறுமியை நித்திரையிலிருந்து விழிக்க செய்துள்ளார்.

எனினும் சிறுமி கண் விழிக்காமல் நித்திரையில் இருந்ததுடன், அவரது உடல் குளிர்மையடைந்திருந்தது.

தாய் சிறுமியின் நிலைமை குறித்து கணவரிடம் அறிவித்ததை அடுத்து ஹொரணை ஆதார வைத்தியசாலையில் சிறுமி அனுமதிக்கப்பட்டுள்ளார்.சிறுமிக்கு சிகிச்சையளித்த வைத்தியர்கள் சிறுமி ஏற்கனவே உயிரிழந்து விட்டார் என தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹொரண காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here