முன்னாள் இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சாவை பிணையில் விடுதலை செய்யுமாறு நீர்கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை (08) உத்தரவிட்டுள்ளது.
விளக்கமறியலி ்வைக்கப்பட்டுள்ள நிமல் லான்சா இன்று நீர்கொழும்பு மேல் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நிமல் லான்சாவை 2 இலட்சம் ரூபாய் பெறுமதியான 2 சரீரப் பிணைகளில் விடுதலை செய்யுமாறு நீர்கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2006 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தாக்குதல் நடத்துதல் மற்றும் ஆயுதங்களை பயன்படுத்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் நிமல் லான்சா நீர்கொழும்பு, கொச்சிக்கடை பொலிஸ் நிலையத்தில் ஆகஸ்ட் 29 ஆம் திகதி சரணடைந்ததையடுத்து விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.