நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர் – வொஷிங்டன் சுந்தர் விலகல்

0
11

இந்தியா- நியூசிலாந்து அணிகள் ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நேற்று (11) நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இதனையடுத்து இரு அணிகள் மோதும் 2ஆவது ஒருநாள் போட்டி வருகிற 14ஆம் திகதி நடைபெறவுள்ளது.

இந்நிலையில் நேற்றைய போட்டியின் போது தமிழக வீரர் வொஷிங்டன் சுந்தர் காயமடைந்தார். இந்த காயம் காரணமாக நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து விலகியுள்ளார்.

முன்னதாக டி20 அணியில் இடம் பெற்றிருந்த இடதுகை துடுப்பாட்ட வீரரான  திலக் வர்மா காயம் காரணமாக முதல் 3 டி20 போட்டியில் இருந்து விலகி உள்ளார்.

டி20 உலககிண்ணம்  தொடங்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் இந்திய வீரர்கள் காயமடைவது இந்திய அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here