ஹபரதுவ பகுதியிலுள்ள விகாரை ஒன்றில் 41 வயது நியூசிலாந்து பயணி ஒருவரை பாலியல் துன்புறுத்தல் செய்த குற்றச்சாட்டில் 81 வயது மூத்த பெளத்த பிக்கு ஒருவர் #கைது செய்யப்பட்டுள்ளார்.
விகரையின் தலைமை துறவியாக பணியாற்றும் இவர், பயணிக்கு உணவு மற்றும் பானங்கள் வழங்கிய பின்னர், அவரை விகாரையில் உள்ள அறை ஒன்றுக்கு அழைத்துச் சென்று பாலியல் துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்ட பயணி இச்சம்பவத்தை உனவடுன பயணிகள் பொலிஸ் நிலையத்தில் புகார் செய்தார். பின்னர் இவ்வழக்கு ஹபரதுவ பொலிஸாருக்கு மாற்றப்பட்டது.
இந்நிலையில், விசாரணையின் ஒரு பகுதியாக, பாதிக்கப்பட்ட பெண் கராபிட்டிய வைத்தியசாலையில் சட்ட வைத்திய அதிகாரியால் பரிசோதிக்கப்படவுள்ளார்.