நியூசி. அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராகிறார் ரங்கன

0
70

இலங்கை வரும் நியூசிலாந்து அணிக்கு சுழற்பந்து பயிற்சியாளராக இலங்கையின் முன்னாள் வீரர் ரங்கன ஹேரத் இணைக்கப்பட்டுள்ளார்.

அவுஸ்திரேலிய அணி அடுத்த இரண்டு மாதங்களில் ஆசியாவில் மொத்தம் ஆறு டெஸ்ட் போட்டிகளில் ஆடவுள்ளது. இதில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இந்தியாவில் நடைபெறும் ஒரே ஒரு டெஸ்ட் போட்டி மற்றும் இலங்கையில் நடைபெறும் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்காகவுமே ரங்கன ஹேரத் நியமிக்கப்பட்டுள்ளார்.

‘அஜேய் (படேல்)இ மிட்ச் (சான்ட்னர்) மற்றும் ரச்சின் (ரவிந்திரா) ஆகிய மூன்று சுழல் வீரர்கள் இருக்கும் நிலையில் ரங்கன ஹேரத்துடன் பணியாற்றுவது துணைக் கண்டத்தில் உள்ள மூன்று டெஸ்ட் போட்டிகளுக்கும் பெரும் நன்மை தருவதாக இருக்கும்’ என்று நியூசிலாந்து அணி பயிற்சியாளர் கரி ஸ்டீட் தெரிவித்துள்ளார்.

இலங்கை அணிக்காக 93 போட்டிகளில் 433 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கும் ரங்கன ஹேரத் அண்மைக் காலம் வரை பங்களாதேஷ் அணியின் சுழற்பந்து பயிற்சியாளராக செயற்பட்டார். நியூசிலாந்து அணியின் சுழல்பந்து வீச்சுப் பயிற்சியாளராக பாகிஸ்தானிம் பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் உள்ளூர் போட்டிகளுக்கான ஆலோசகராக அவர் நியமிக்கப்பட்டதையடுத்து ரங்கன ஹேரத்தின் சேவையைப் பெற்றுக்கொள்ள நியூசிலாந்து கிரிக்கெட் சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையில் காலியில் நடைபெறும் இரண்டு போட்டிகளைக் கொண்ட தொடர் எதிர்வரும் செப்டெம்பர் 18 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here