நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிறியரக லொறி மதகில் பாய்ந்து விபத்து கர்பினித்தாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டிக்கோயா நோர்வூட் பிரதான பாதையில் வைத்தியசாலைக்கு முன்பாக4 இன்று 05 பகல் இடம்பெற்றுள்ளது.
சாரதி தனது மனைவியை வாகனத்தில் நிறுத்திவிட்டு சென்ற வேளை வாகனம் நகர்ந்து குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் சம்பவம் நிகழும் போது கர்ப்பிணித்தாய் அமர்ந்திருந்தாகவும்,வாகனத்தின் தடையினை போடாததனால் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளன.
சம்பவத்தில் சிறிய காயங்கள் மற்றும் அதர்ச்சி காரணமாகவே அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மலைவாஞ்ஞன் ஹட்டன் விசேட நிருபர்