நிலச்சரிவு விபத்தில் சிக்கி மூவர் பலி – அஹங்கமவில் சோகம்!

0
41

அஹங்கம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திட்டகல பகுதியில்,  நேற்று (22) பிற்பகல் இடம்பெற்ற நிலச்சரிவு விபத்தில் சிக்கி கட்டுமானத் தொழிலாளர்கள் மூவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.

கட்டுமானப் பணி ஒன்றில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போதே, அங்கிருந்த மண் மேடு ஒன்று திடீரென சரிந்து விழுந்ததில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

மண் சரிவில் தொழிலாளர்கள் மூவர் சிக்கியிருப்பதாகக் கருதப்பட்ட நிலையில், அவர்களை மீட்பதற்கான தேடுதல் நடவடிக்கைகள் உடனடியாக முன்னெடுக்கப்பட்டன.

இருப்பினும், மீட்கப்பட்ட மூவரும் உயிரிழந்துவிட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இச்சம்பவம் குறித்து அஹங்கම பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here