நிலைமை சீர் செய்யப்படும். என்றும் நாங்கள் உங்களுடன்.

0
179

” இந்த அரசுமீது மக்கள் தற்போது கடும் அதிருப்தியில் உள்ளனர். இன்னும் சிறிது காலம் பொறுமையாக இருங்கள். நிலைமை சீர்செய்யப்படும். என்றும் நாங்கள் உங்களுடன்.”- என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

கொட்டகலை பிரதேச சபைக்குட்பட்ட கிறிஸ்லஸ்பாம் – கே.ஜி.கே பாதை காபட் இடப்பட்டு மக்கள் பாவனைக்கு இன்று (07.11.2021) கையளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” பெருந்தோட்டப்பகுதிகளில் உள்ள பாடசாலைகள் மேம்படுத்தப்பட வேண்டும். வீதிகள் புனரமைக்கப்பட வேண்டும். இவ்விரண்டு விடயங்களையும் சிறப்பாக செய்துமுடித்தால் ஏனைய அபிவிருத்தி நடவடிக்கைகள் தானாகவே நடக்கும்.

நன்றி மறக்ககூடாது என அனுசியா அம்மையார் குறிப்பிட்டார். எனவே, நெருக்கடியான கால கட்டத்திலும் வீதி புனரமைப்பு பணியில் ஈடுபட்ட வீதி அபிவிருத்தி சபை அதிகாரிகளுக்கும், ஊழியர்களுக்கும் இச்சந்தர்ப்பத்தில் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

பொருட்களின் விலையேற்றத்தால் மக்களுக்கு வாழ்வாதாரப் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனால் அரசுமீது அதிருப்தியில் உள்ளனர். இங்கு மட்டுமல்ல உலக நாடுகளிலும் இந்நிலைமை நீடிக்கின்றது. எனவே, பொறுமை காக்கவும். இன்னும் ஒரு வருடத்துக்குள் நிலைமை சீர் செய்யப்படும். என்றும் நாங்கள் உங்களுடன்.”- என்றார்.

க.கிஷாந்தன்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here