நிவாரணம் கிடைக்கப்பட வேண்டியவர்கள் நிராகரிக்கப்பட்டுள்ளனர்.

0
165

நாட்டில் பிறப்பித்துள்ள ஊரடங்கு காலப்பகுதியில் அரசாங்கம் நிவாரணம் வழங்கப்பட்டு வருகின்ற நிலையில் அந்நிவாரணம் கிடைக்கப்பட வேண்டியவர்களுக்கு வழங்காமல் நிராகரிக்கப்படுவதாக மலையக தொழிலாளர் முன்னணியின் நிதிச்செயலாளர் புஸ்பா விஸ்நாதன் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில் ஊரடங்கு காலப்பகுதியில் பெரிதும் பாதிப்புக்குள்ளானோர்கள் முச்சக்கர வண்டி சாரதிகளே.அன்றாடம் முச்சக்கர வண்டியை நம்பியே வாழ்க்கை நடாத்தி வருகின்றனர்.இந்நிலையில் பல முச்சக்கரவண்டி சாரதிகள் நிவாரணத்தொகை பெறுவதில் உள்வாங்கப்படவில்லை.அதேபோல இசைக்கலைஞர்கள் மற்றும் ஆலய குருக்கள்மார்களும் மிகவும் வாழ்வாதாரத்தில் இக்காலப்பகுதியில் பின்னோக்கி செல்லப்பட்டுள்ளனர்.ஆனால் அவர்களுக்கும் இந்நிவாரணத்தொகை வழங்கப்படாமல் நிராகரிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கம் நிவாரணங்களை வழங்கினாலும் முறையான திட்டமிடலும் முகாமைத்துவமும் இன்மையால் உண்மையாக வறுமானத்தை இழந்வர்கள் கைகழுவிடப்படுகின்றார்கள். எனவே அரசாங்கத்தோடு இணைந்துள்ள மலையக கட்சிகள் இவ்விடயத்தில் கவனம் செலுத்தி தேவையானவர்களுக்கு இந்நிவாரணத்தை வழங்க முன்வருமாறு மலையக தொழிலாளர் முன்னணியின் நிதிச்செயலாளர் புஸ்பா விஸ்வநாதன் குறிப்பிட்டுள்ளார்.

நீலமேகம் பிரசாந்த்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here