இன்று உலகில் உள்ள நாடுகளில் பெண்களின் அரசியல் பிரவேசத்தில் இலங்கை 179 ஆம் இடத்தில் இருகின்றது. உகண்டா முன்னிலை வகிக்கின்றன. தற்போது உலக நாடுகளில் பெண் தலைவர்கள் அதிகமாக இருகின்றார்கள். காரணம் பெண்களின் அரசியல் பிரவேசம். இலங்கையிலும் இந் நிலை உருவாக வேண்டும். இலங்கையை பொருத்த வரையில் ஆசிரியர் தொழிலில் 75 வீதமான பெண்கள் காணப்படுகின்றனர். அதேபோல் அரச சேவையில் 75 வீதமான பெண்கள் சேவை புரிகின்றனர்.
மலைய தோட்ட தொழிலாளர்களில் பெண்களே அதிகம்¸ இலங்கைக்கு அதிக அளவிலான வெளிநாட்டு வருமானத்தை பெற்று தருபவர்களும் பெண்கள். சதந்திர வர்த்தக வலையத்தில் தொழில் புரிபவர்களில் அதிகமானோர் பெண்கள். இந் நிலையில் இலங்கையில் பெண்களின் அரசியல் பிரவேசம் குறைவாக இருக்கின்றது இதனை அதிகரிக்க வேண்டியது கட்டாயமானதான ஒன்றாதும். இலங்கையில் பெண்களுக்கு அரசியல் அந்தஸத்து கொடுப்பது குறைவாகவே இருக்கின்றது.
அதனால் தான் நவம்பர் மாதம் வர இருக்கும் உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் பெண்களுக்கு அதிக சந்தர்ப்பம் அளிக்கும் அதே நேரத்தில் மலையத்தில் பெண்களுக்கும் வாய்ப்புகளை வழங்க இருக்கின்றோம். இதற்கு பெண்கள் முன் வர வேண்டும் என கூறுகின்றார்; கல்வி இராஜாங்க அமைச்சரும் மலையக மக்கள் முன்னனியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தவைவருமான் வே.இராதாகிருஸ்ணன்.
தேசிய வீடமைப்பு அதிகார சபையுடன் இணைந்து பெருந்தோட்ட மக்களுக்கும் வீடமைப்புகளை மேற்க் கொள்ளும் பொருட்டு அக்கரபத்தன அயோனா தோட்டத்தில் 10 வீடுகளை அமைப்பதற்க்கான அடிகல் நாட்டும் நிகழ்விற்கு பிரதம அதிதியாக கலந்துக் கொண்டு அங்கு உரையாற்றும் போதே மேற்படி கருத்தினை இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.
இந் நிகழ்விற்கு மத்திய மாகான சபை உறுப்பினர் ஆர்.இராஜாராம்¸ மலையக மக்கள் முன்னனியின் செயலாளர் நாயகம் ஏ.லோரன்ஸ்¸ தேசிய வீடமைப்பு அதிகார சபையின் அதிகாரிகள்¸ தோட்ட முகாமையாளர்¸ மலையக தொழிலாளர் முன்னனியின் நிதி செயலாளர் எஸ்.விஸ்வநாதன்¸ மலையக மக்கள் முன்னனியின் நிர்வாக இயக்குனர் எஸ் அஜித்குமார்¸ பணிப்பாளர் . எம்.கணகராஜ்¸; உட்பட தொழி உறவு அதிகாரிகள் தோட்ட தலைவர்கள் பொது மக்கள் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.
தொடர்ந்து உரையாற்றுகையில்
மலையத்தில் பெண்களின் அரசியல் பிரவேசம் குறைவாகவே இருக்கின்றது. நுவரெலியா மாவட்டத்தில் 5 பிரதேச சபைகளே இருக்கின்றது அது தற்போது மேலும் 5 அதிகரித்து 10 ஆக மாற உள்ளது. இந்நிலையில் பெண்கள் அரசியலுக்கு முன் வந்தால் உள்ளுராட்சி சபை தேர்தலில் பெண்கள் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது. இதனை கவனத்தில் கொண்டு செயற்பட வேண்டும். நம்மலே நம்மலை ஆளும் நிலையை உருவாக்கி கொள்ள வேண்டும். “நான் தற்போது ஒரு மந்திரி தான் ஆளால் நீங்கள் எனக்கு ஓட்டு போடாவிட்டால் எந்திரி” மக்களாகிய உங்களுக்கே பலம் அதிகமாக இருக்கின்றது. அதை பயன்படுத்த வேண்டும்.
அதே போல் மலையக இளைஞர் யுவதிகளும் அரசியலுக்கு வர வேண்டும். மலையக பெண்கள் முதலில் தோட்ட தலைவர்களாகவும் கோயில் தலைவிகள் ஆகையாவது வர வேண்டும். இதற்கு பெண்கள் அச்சமின்றி துணிந்து அரசியலுக்கு வருவது கட்டாயமானதாகும். பெண்களின் அரசியலுக்கான பிரவேசத்தின் பின்னடைவே அரசியலில் பெண்கள் குறைவாக இருப்பதற்கு காரணமாக இருக்கின்றது. எனவே மலைய பெண்களுக்கு இம்முறை உள்ளுராட்சி சபைகளுக்கு தேர்தலில் போட்டியிட முன் வரவேண்டும். அதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம் என்று கூறினார்.
பா. திருஞானம்.