வீதிகளை மறிக்க வேண்டாம் என பொதுமக்களுக்கும் போராட்டக்காரர்களுக்கும் நீதவான் உத்தரவிட்டுள்ளார். நீதிமன்ற உத்தரவை மீறி போராட்டத்தில் ஈடுபடுபவர்களை கைது செய்ய கோட்டை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் பேரவையினால் கொழும்பில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் ஆர்ப்பாட்டம் தொடர்பிலேயே நீதிமன்றம் மேற்படி உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதன்படி, கோட்டை ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதி மாளிகை, பிரதமர் அலுவலகம், கலுமுவதொர பிட்டிய உள்ளிட்ட பல இடங்களுக்குள் போராட்டக்காரர்கள் செல்ல தடை விதித்து கோட்டை நீதவான் திலின கமகே இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
மேலும், வீதிகளை மறிக்க வேண்டாம் என பொதுமக்களுக்கும் போராட்டக்காரர்களுக்கும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், அமைதியான முறையில் போராட்டங்களை முன்னெடுக்க முடியும் என தெரிவித்த நீதவான், நீதிமன்ற உத்தரவை போராட்டக்காரர்களிடம் கையளிக்குமாறு கோட்டை பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.
பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் பேரவையின் இணைப்பாளர் மதுஷன் சந்திரஜித் உள்ளிட்ட 10 பேருக்கு எதிராகவே இந்த உத்தரவை பிறப்பிக்கப்பட்டுள்ளது.




