நீர்கொழும்பு காவல்துறை அத்தியட்சகர் அலுவலகத்தின் குப்பைத் தொட்டியில் இருந்து இரண்டு கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.
காவல்துறை பேச்சாளர், சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ இதனைத் தெரிவித்துள்ளார்.
நேற்று பிற்பகல் குறித்த குப்பைத் தொட்டியிலிருந்து கழிவுகளை அகற்றும் சந்தர்ப்பத்தில் நகர சபை பணியாளர் ஒருவரினால் இந்த கைக்குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், அந்த கைக்குண்டுகள் குறித்த குப்பைத் தொட்டியில் எவ்வாறு இடப்பட்டமை என்பது தொடர்பில் இன்னும் உரிய தகவல்கள் கிடைக்கப்பெறாத நிலையில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக காவற்துறை பேச்சாளர் தெரிவித்தார்