மத்திய மாகாண கொவிட்19 ஒழிப்பு கூட்டம் இன்று மத்திய மாகாண ஆளுநர் தலைமையில் கண்டி ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது. நுவரெலியா மற்றும் மாத்தளை மாவட்டங்களில் எதிர்வரும் (11) ஆம் திகதி முதல் கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்படவுள்ளது.
இக்கூட்டத்தில் கலந்துக்கொண்ட தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான்
மத்திய மாகாணத்தில் வாழுகின்ற தோட்ட தொழிலாளர்களுக்கும் அவர்களின் குடும்பங்களுக்கும் கொரோனா தடுபூசி வழங்கபட வேண்டுமென ஆணித்தனமாக வழியுருத்தினார்.
மேலும் இன்றைய பொருளாதார சூழ் நிலையில் தங்களது உயிரையும் பொருட்படுத்தாமல் நாட்டின் அன்னிய செலவானிக்காகவும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் மழை,வெய்யில் பொருட்படுத்தாது உழைத்து வரும் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு தடுப்பூசி கட்டாயம் வழங்கப்பட வேண்டும் என்ற கட்டாயத்தை கோரிக்கையாக முன்வைத்தார்.
அமைச்சர் ஜீவன் தொண்டமானின் இந்த கோரிக்கைக்கு அமைவாக எதிர்வரும் 11ஆம் திகதி
நுவரெலியா மாவட்டத்திற்கும், மாத்தளை மாவட்டத்திற்கும் கொரோனா தடுப்பூசி வழங்கும் திட்டம் ஆரம்பிக்க சுகாதார பிரிவால் முடிவு எடுக்கப்பட்டது.
மேலும் கண்டி மாவட்டத்திலும் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு முன்னுரிமை வழங்க சுகாதார பிரிவால் முடிவு எடுக்கப்பட்டது.
அதனடிப்படையில் முதற்கட்டமாக நுவரெலியா மாவட்டத்திற்கு 50000 தடுப்பூசிகளும், மாத்தளை மாவட்டத்திற்கு 25000ஆயிரம் தடுப்பூசிகளுமாக 75 ஆயிரம் தடுப்பூசிகள் வழங்கப்படவுள்ளது. கண்டி மாவட்டத்தில் மேலும் 50000
தடுப்பூசிகள் வழங்கப்படவுள்ளது.
அதேநேரத்தில் நுவரெலியா மாவட்டத்தில் காணப்படும் 12 பொது சுகாதார காரியாலய பிரிவில் முதல் ஆறு பொது சுகாதார பிரிவுகளில் கொரோனா தடுப்பூசிகளை முதற்கட்டமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் அதிகமாக தொற்றாளர்கள் இனங்காணப்பட்டு வரும் பொகவந்தலாவ,அம்பகமுவ, லிந்துல்ல, கொட்டகலை, நுவரெலியா,மற்றும் நுவரெலியா மாநகர சபை போன்ற பொது சுகாதார அதிகாரி பிரிவுகளில் 50000 தடுப்பூசிகளை செலுத்தப்படவுள்ளது.
இதன்போது 60 வயதிற்கும் மேற்பட்டவர்களுக்கும், தெரிவு செய்யபட்ட கர்ப்பிணி தாய்மார்கள,மற்றும் தடுபூசிகள் செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் அவர்கள் நாட்டின் அதிமேதகு ஜானாதிபதி கோட்டபாய ராஜபக்ச அவர்களுடன் கலந்துரையாடி மலையக பெருந்தோட்டப்பகுதிகள் அனைத்திற்கும் தடுப்பூசிகள் வழங்கவும் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். மேலும் கண்டி மாவட்டத்தில் கங்கவட்ட கோரள உட்பட பல இடங்களிலும் மாத்தளை மாவட்டத்தில் உக்குவல, இரத்தொட்ட ஆகிய பெருந்தோட்ட பகுதிகளுக்கும் தடுப்பூசி வழங்கவும் நடவடிக்கை சுகாதார பிரிவினரால் முன்னெடுக்கபட உள்ளது. இக்கூட்டத்தில் அமைச்சருடன் பிரஜாசக்தி செயல்திட்டத்தின் பணிப்பாளர் நாயகம் பாரத் அருள்சாமி பங்குபற்றினார்
மத்திய மாகாண ஆளுநர் தலைமையில் நடைபெற்ற இந்த விசேட கூட்ட அமர்வில் அமைச்சர்களான கெஹலிய ரம்புக்வெல, மஹிந்தானந்த அலுத்கமகே,சி.பி ரத்நாயக்கா உள்ளிட்ட அமைச்சர்களும் கண்டி, மாத்தளை மாவட்டத்தை பிரதிநிதிபடுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள், வைத்தியர்கள் மாவட்ட,பிரதேச செயலாளர்கள் இராணுவ உயர் அதிகாரிகள், பிரதி பொலிஸ்மா அதிபர், சுகாதார அமைச்சின் அதிகாரிகள், அரச அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
க. கிஸாந்தன்