நுவரெலியாவில் அரசுக்கு எதிரான போராட்டம்: கடைகள் மூடல், போக்குவரத்து ஸ்தம்பிதம்.

0
181
நாட்டில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வரும் நிலையில் அரசுக்கு எதிரான தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.
கோட்டாபய ராஜபக்சேவும், பிரதமர் மகிந்த ராஜபக்சே தலைமையிலான அரசும் பதவி விலக கோரியும்,தொடர் விலையேற்றத்தைக் கண்டித்தும் , பெரும் போகத்திற்கு தேவையான இரசாயன உரம் மற்றும் விவசாயத்திற்கு தேவையான ஏனைய இரசாயன திரவியங்களை பெற்றுதருமாறு கோரி பல நகரங்களில் இன்றும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன.
இதற்கு ஆதரவாக மதகுருமார்கள், நகரசபை ஊழியர்கள் , நுவரெலியா பொது மாவட்ட வைத்தியசாலை ஊழியர்கள் ,அதிபர் ஆசிரியர் மற்றும் பொது மக்கள் இணைந்து இந்த போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர் போராட்ட பேரணியானது நுவரெலியா மத்திய சந்தைக்கு முன்பாக உள்ள “கோட்டா ? கோகம” இல் ஆரம்பிக்கப்பட்டு நுவரெலியா பிரதான வீதியினூடாக நுவரெலியா தபால் நிலையத்திற்கு முன்பாக அரசுக்கு எதிராக எதிர்ப்பு கோஷங்கள் எழுப்பப்பட்டு, பதாதைகளை ஏந்தியவாறு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
டி.சந்ரு செ.திவாகரன், க.கிஷாந்தன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here