நுவரெலியாவில் ஆட்டோ – வேன் விபத்து: இரு வெளிநாட்டு பிரஜைகள் காயம்!

0
217

நுவரெலியா – கொழும்பு பிரதான வீதியில் லபுக்கலை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இரு வெளிநாட்டு பிரஜைகள் காயமடைந்துள்ளனர்.
நுவரெலியாவில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற வேனொன்று, எதிர்திசையில் கண்டியில் இருந்து நுவரெலியா நோக்கி பயணித்த ஆட்டோவுடன் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

ஆட்டோவில் பயணித்த நெதர்லாந்து நாட்டு பிரஜைகள் இருவர் படுகாயமடைந்த நிலையில் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நுவரெலியாவில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற வேனில் தடையாளி முறையாக இயங்காமை காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் , விபத்தின் போது எட்டு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வேணில் இருந்ததாகவும் , சாரதியின் கவனக்குறைவே விபத்திற்கான காரணமென தெரிவித்த நுவரெலியா போக்குவரத்து பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நானுஓயா நிருபர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here