‘ஐஸ்’ போதை பொருள் உற்பத்தியில் பயன்படுத்தப்படும் கிட்டத்தட்ட 50,000 கிலோகிராம் ரசாயனங்கள் கண்டுபிடிக்கப்பட்ட விடயத்தில் இலங்கை பொதுஜன பெரமுன (SLPP) உறுப்பினர் ஒருவரும் அவரது சகோதரரும் சம்பந்தப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தலாவ, மித்தெனியவில் நேற்று வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட காவல்துறை சோதனை நடவடிக்கையின் போது இந்த விடயம் தெரியவந்துள்ளது.
குறித்த ரசாயனங்கள் பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த கெஹெல்பத்தர பத்மே என்பவரால் இறக்குமதி செய்யப்பட்டு நுவரெலியாவில் உள்ள வாடகை வீடொன்றில் பாகிஸ்தானியர்களின் உதவியுடன் ஐஸ் தயாரிக்கப் பயன்படுத்தியுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
“பேகோ சமன்” என்று அழைக்கப்படும் சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் இருந்து பெறப்பட்ட தகவல்களைத் தொடர்ந்து மேற்கு மாகாண வடக்கு குற்றப்பிரிவால் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.
அங்குணுகொலபெலஸ்ஸவைச் சேர்ந்த முன்னாள் SLPP பிரதேச சபை உறுப்பினர் சம்பத் மனம்பேரி மற்றும் பியால் மனம்பேரி சகோதரர்கள் இந்த ரசாயனங்களை மறைப்பதற்கு பொறுப்பேற்றதாக புலனாய்வாளர்கள் சந்தேகிக்கின்றனர்.
தற்போது நடந்து வரும் விசாரணைகள் குறித்து அவர்களுக்கு எச்சரிக்கப்பட்ட நிலையில், அவர்கள் ஒரு ட்ரக் வண்டியில் மித்தெனிய பகுதியில் உள்ள கட்டிடத்துக்கு இந்த ரசாயனங்களை கொண்டு சென்றதாக நம்பப்படுகிறது.
சந்தேக நபர்கள் இருவரும் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர், அவர்களைக் கைது செய்ய பொலிஸார் நடவடிக்கையை தொடங்கியுள்ளனர்.