வெளிநாட்டு உள்நாட்டு ஊடகவியலாளர்கள் பெருமளவில் விழாவில் பங்கேற்புஇலங்கை தொழிலாளர் காங்கிரஸின் 79வது மேதின விழா நுவரெலியா நகரில் பெருவிழாவாக மே 7ம் திகதியன்று காலை 10.00 மணிக்கு நடைபெறவுள்ளது.
இது குறித்து ஊடகப் பிரிவு அனுப்பி வைத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது:-
இ.தொ.கா தலைவரும் பொதுச் செயலாளரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் நிகழும் இம்மேதின விழாவில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த விழாவாக நுவரெலியா நகரில் நடைபெறவிருக்கின்றது.
அனைத்து பிரதேச தோட்டத் தலைவர்கள்ரூபவ் தலைவிகள் எமது அங்கத்தவர்கள் என பெருமளவில் தொழிலாளர் வர்க்க சிந்தனையுடன் உணர்வு பூர்வமாக கலந்து கொள்வதற்கு சகலருக்கும் இ.தொ.கா அழைப்பு விடுத்திருக்கின்றது.
அன்றைய தினம் வர்க்க உணர்வுள்ள சிறப்புரைகளும் நடைபெறும். அத்துடன் பாரம்பரிய கலாசார நிகழ்வுகளோடு பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொள்ள பல்வேறு பிரதேசங்களிலிருந்து பேரணிகளாக பிரதான மேடையை மூவர்ணக் கொடிகள் தாங்கிய வண்ணம் ஊர்திகளுடன் வந்தடைவார்கள்.
மொத்தத்தில் நுவரெலியா நகர் மேதின விழாக்கோலம் பூண்டிருப்பதற்கான அனைத்து
ஏற்பாடுகளையும் மாகாணசபை அமைச்சர்கள் மாகாணசபை அங்கத்தவர்கள் தேசிய அமைப்பாளர் நகரசபை பிரதேசசபை ஆகியவற்றின் தலைவர்களும் அங்கத்தவர்களும் இ.தொ.கா உப தலைவர்கள் உதவிச் செயலாளர்கள் பிரதேசங்களுக்குப் பொறுப்பான பிராந்திய இயக்குனர்கள் பிரதிநிதிகள் ஆகியோர் வெகுமுனைப்புடன் மேற்கொண்டு வருகின்றார்கள்.
இதேவேளை வெளிநாட்டு உள்நாட்டு ஊடகவியலாளர்கள் பெருமளவில் கலந்து வெளி உலகிற்கு எடுத்துக் காட்டுவதற்காக தமது சிறப்பான பங்களிப்பை வழங்க முன்வந்துள்ளார்கள்.
மலையமெங்குமுள்ள பிரதேசங்களிலிருந்து பெருந்திரளான மக்கள் இதில் கலந்து கொள்வார்கள்
என ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
எஸ்.தேவதாஸ்