நுவரெலியா நகரில் தங்க நகை கடை ஒன்றில் 5 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க ஆபரணங்களை திருடிச்சென்ற சந்தேக நபர் குறித்த கடையில் உள்ள சீ.சீ.டீ.வீ கெமராவில் பதிவாகியுள்ள காட்சிகளின் பின் சந்தேக நபரை கைது செய்ய நுவரெலியா பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.16ம் திகதி காலை வேளையில் குறித்த கடைக்கு நகை வாங்குவது போல் வந்த இவர் கடை ஊழியர்களிடம் சகஜமாக பேசிக்கொண்டிருந்த நிலையில் லாவகமான முறையில் 5 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க மோதிரம் மற்றும் தோடு ஆகிய நகைகளை திருடிச்சென்றுள்ளார்.
குறித்த சந்தேக நபர் அணிந்திருந்த காற்சட்டை பையில் திருடிய நகைகளை போடும் காட்சிகளும் சீ.சீ.டீ.வீ கெமராவில் தெளிவாக பதிவாகியுள்ளது.
பின்னர் கடை உரிமையாளர் நகைகள் காணாமல் போயுள்ள சம்பவத்தை இனங்கண்டு சீ.சீ.டீ.வீ கெமராவில் பதிவாகிருந்த காட்சிகளை பார்த்து நுவரெலியா பொலிஸாருக்கு தகவல் வழங்கியதோடு, முறைபாடு ஒன்றையும் பதிவு செய்துள்ளார்.
இதனையடுத்து நுவரெலியா பொலிஸார் சந்தேக நபரை தேடும் நடவடிக்கையில் ஈடுப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
(க.கிஷாந்தன்)