நுவரெலியா பிரதான நகரில் உள்ள பிரசித்தி பெற்ற உணவகம் சுமார் 17,500 ரூபா பெறுமதியான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சொக்லேட்டின் அதிகபட்ச சில்லறை விலையை மாற்றி வர்த்தகர் ஒருவருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதுஇச் செயலுக்கு எதிராக நுவரெலியா நுகர்வோர் விவகார அதிகாரசபை சட்ட நடவடிக்கை எடுத்துள்ளது.
உணவகத்தின் நிர்வாகம் சொக்லேட்டுகளின் விலைகளை அழித்துவிட்டு தற்போதைய சொக்லேட்டுகளின் விலையே காணப்படுகின்றது என நுவரெலியா நுகர்வோர் விவகார அதிகாரசபைக்கு நுவரெலியா மாவட்ட சிரேஷ்ட விசாரணை அதிகாரி ரங்க கருணாரத்னவிடம் முறைப்பாடு கிடைத்துள்ளது.
சந்தேகத்திற்குரிய உணவகத்திற்கு சென்று சோதனை செய்து உணவகத்தின் முகாமையாளருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்து உரிய சொக்லேட்டுகளை கைப்பற்றியதாக நுகர்வோர் அதிகார சபையின் நுவரெலியா மாவட்ட சிரேஷ்ட விசாரணை அதிகாரி ரங்க கருணாரத்ன தெரிவித்தார். சந்தேகநபரை எதிர்வரும் 13ஆம் திகதி நுவரெலியா நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு பணிப்புரை விடுத்ததையடுத்து பிணையில் விடுவிக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.
டி.சந்ரு செ.திவாகரன்