நுவரெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டொப்பாஸ் பகுதியில் பன்றி இறைச்சியுடன் சந்தேக நபர் ஒருவர் ஹக்கல வினவிலங்கு திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யபட்டுள்ளதாக தெரியவருகிறது. இந்த சம்பவம் 20.07.2018 அன்று இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.ஹக்கல வினவிலங்கு திணைக்கள அதிகாரிகளினால் மேற்கொள்ளபட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த இறைச்சி கைப்பற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
கைப்பற்றப்பட்ட பன்றி இறைச்சியை குறித்த நபர் தன்வசம் வைத்திருந்த வேளையிலேயே மீட்கப்பட்டுள்ளது.
கைது செய்யபட்ட சந்தேக நபர் நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தில் 20.07.2018 அன்று ஆஜர்படுத்தபட்டதாக ஹக்கல வினவிலங்கு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.
குறித்த சந்தேக நபர் நுவரெலியா தோட்டம், கீழ்பிரிவு, லபுக்கலை எனும் பகுதியை சேர்ந்த டிம்.அனுர ராஜபக்ஷ என்பவராவார்.
(க.கிஷாந்தன்)