நுவரெலியா பிரதான தபால் நிலையத்திற்கு முன் உள்ள பேக்கரி நிலையத்திலேயே நேற்று இரவு இந்த திருட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பேக்கரியின் பின் பகுதியில் உள்ள ஜன்னலை உடைத்து மர்மநபர்கள் உள்ளே புகுந்துள்ளனர் .பாண் மற்றும் பேக்கிரியில் வைத்திருந்த 40 ஆயிரம் பணத்தையும் திருடி சென்றுள்ளனர்.
நுவரெலியாவில் கடந்த மாதங்களில் தொடர்ந்து இவ்வாறான திருட்டுச் சம்பவங்கள் பதிவாகிய வண்ணம் உள்ளது ஆனால் இதுவரை சந்தேகத்தின் எவரும் கைது செய்யப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த சம்பவம் தொடர்பாக நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
டி.சந்ரு செ.திவாகரன்