நுவரெலியாவில் போதை பொருட்கள் கைவசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் 06 சந்தேக நபர்கள் கைது!!

0
186

நுவரெலியா பொலிஸ் பிரிவில் போதை பொருட்கள் கைவசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் 06 சந்தேக
நபர்கள் 30.07.2018ம் திகதி கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் ஹாவாஎலியா அம்பகஸ்தோவர கடுகஸ்தோட்ட நுவரெலியா பொரலந்த ஆகிய
பிரதேசங்களை வசிப்பிடமாகக் கொண்ட 20 – 30 வயதிற்குட்பட்டவர்கள் ஆவர்.

மேலும் கடந்த ஜூலை மாதம் போதைப் பொருள் கைவசம் வைத்திருந்தவர்கள் 19 பேர்கள் கைது செய்யப்பட்டு
நுவரெலியா மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வருடம் ஜனவரி மாதம் 04 சந்தேக நபர்களும் பெப்ரவரி மாதம் 03 சந்தேக நபர்களும் மார்ச் மாதம் 01 சந்தேக நபரும் ஜூன் மாதம் 02 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டு நுவரெலியா மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் இவர்கள் ez cash  மூலமாக பணம் பெற்று மிகவும் இவர்கள் போதை பொருட்கள் விற்றுள்ளனர்.
பொதுமக்களிடம் இருந்து தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கு நகரத்தில் பொது இடங்கள் சுவரொட்டிகளும்
காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த தேடுதல் நடவடிக்கையை மேற்கொள்ள நுவரெலியா பொலிஸ் அத்தியட்சகர் I.E.T சுகதபால அவர்களின்
பணிப்புரையின் கீழ் நுவரெலியா பொலிஸ் பொறுப்பதிகாரி சந்தன அவர்களின் வழிநடாத்திலில் நுவரெலியா பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி உதவி பொலிஸ் அதிகாரி சமன் பெரேரா அவர்களின் தலைமையில் பொலிஸ் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

 

டீ. சந்ரு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here