நுவரெலியா மாவட்டத்தில் அமைக்கப்பட்டிருக்கும் கொரோனா தனிமைப்படுத்தல் நிலையமாக நுவரெலியா சினிசிட்டா நகர மண்டபத்தில் அமைக்கப்பட்டிருக்கின்றது. ஆகையால் நுவரெலியா மாவட்டத்தில் கொரோனா என அடையாளப்படுத்தப்படுபவர்கள் நுவரெலியாவில் அமைக்கப்பட்டிருக்கும் சினி சிட்டா தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்க வைக்கப்படுகின்றார்கள். எனினும் அவர்களுக்கு போதுமான வசதிகள் எதுவும் இல்லை எனவும் முறையாக உணவுகள் வழங்கப்படுவதில்லை எனவும் சிகிச்சை நிலையங்களில் உள்ளவர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுப்பதாகவும் குற்றம் சுமத்துகின்றனர்.
சிகிச்சை நிலையத்தில் உள்ளவர்கள் பல்வேறு அரசியல் தலைவர்களிடம் இந்த விடயம் தொடர்பாக முறைப்பாடு செய்யப்பட்டு இருந்த போதிலும் இதை எவரும் கண்டுகொள்ளவில்லை என்று அவர்கள் மன வேதனையுடன் கூறுகின்றனர். ஆகையால் உரிய அரசியல் தலைவர்கள் இவ் தனிப்படுத்தல் நிலையத்திலும் உங்கள் அரசியல் வேறுபாடுகளை காட்டாமல் உரிய அரசாங்க அதிகாரிகளிடம் சரியான தீர்வொன்றை பெற்றுத் தராதவிடத்து. நாங்கள் குடும்பத்தைப் பிரிந்து கொரோனாவோடு இன்னொரு வேதனையை அனுபவிப்பதோடு தனக்கு சுகமாக வேண்டும் என்று இறைவனைப் பிரார்த்தித்துக் கொண்டு உயிரை கையில் பிடித்த வண்ணம் இருப்பதாக கூறுகின்றனர்.
இவர்களுக்கு முறையாக உணவு கூட வழங்குவது இல்லையாம். சிலர் அவர்களின் சுயலாபத்திற்காக உணவில் கூட வஞ்சகம் செய்கின்றனர்.ஆகையால் நுவரெலியா மாவட்டத்திலுள்ள அரசியல் தலைவர்களே உங்களது வீரத்தை இவ்வாறான அப்பாவி மக்களிடம் காட்டாமல் அவர்கள் மீது இரக்கம் காட்டி இப்பிரச்சினையை தீர்த்து வைப்பதற்கு முன் வாருங்கள்.
டி.சந்ரு