இந்திய உயர்ஸ்தானிகர் அலுவலகத்திலிருந்து நுவரெலியா நகரசபை நூலக வளாகத்திற்கு புதிய இந்திய நூலகம் பிரிவு இன்று திறந்துவைக்கும் நிகழ்வு கண்டி கிளைக்கான இந்திய உதவி உயர்ஸ்தானிகர் எஸ் ஆதிரா தலைமையில் நுவரெலியா நகரசபை நூலக வளாகத்தில் இன்று காலை திறந்து வைக்கப்பட்டது.
இந்த இந்திய நூலகப் பிரிவு நுவரெலியா நூலக வாசகர்கள் மற்றும் நுவரெலியா பள்ளி மாணவர்கள் உட்பட பொதுமக்களுக்கு இந்திய கலாச்சாரம் மற்றும் வரலாற்றை அறிந்து கொள்வதற்கு வாய்ப்பளிக்கும் வகையில் “இந்தியன் கார்னர்” என்ற புத்தகப் பிரிவைத் திறந்து வைத்தார்.
இதன் மூலம், நுவரெலியா பாடசாலை மாணவர்கள், நூலக வாசகர்கள் மற்றும் அனைத்து சமூகத்தினரும் இந்திய வரலாறு மற்றும் கலாசாரங்களை அறிந்து கொள்வதற்கு நல்லதொரு இடத்தை உருவாக்குவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இந்திய உதவி உயர்ஸ்தானிகர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது தெரிவித்தார்.
இந்நிகழ்வில், நுவரெலியா மாநகர சபையின் பதில் மாநகர ஆணையாளரும், நுவரெலியா மேலதிக மாவட்ட செயலாளருமான (நிர்வாகம்) திருமதி.சுஜீவா போதிமான்ன, நுவரெலியா மாநகர சபையின் செயலாளர் திரு.கே.கே.எம்.டபிள்யூ. பண்டார, கண்டி இந்திய உயர்ஸ்தானிகராலய ஊழியர்கள், நூலகப் பிரிவு. நுவரெலியா மாநகர சபை, நுவரெலியா பொது நூலக வாசகர் கழக ஊழியர்கள், நுவரெலியா மாநகர சபை சமூக திணைக்கள ஊழியர்கள் உட்பட பெருந்தொகையானோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
நீலமேகம் பிரசாந்த்




