நுவரெலியா நகர கோவில் இடிக்கப்பட வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்படுகின்றன ஆனால் அதே நுவரேலியா நகர பஸ் தரிப்பிடத்துக்கு முன் புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளது 70 வருடம் பழைமை வாய்ந்த ஆலயம் உடைக்கப்படுவதை எதிர்த்து எந்த மலையக தலைமைகளாவது களம் இறங்கினார்களா? அமைச்சர் திகாம்பரம், மனோகணேசன், ராதாகிருஸ்னன், ஆறுமுகன் தொண்டமான் தமிழ் தலைமைகள் தானே ஏன் எம் தட்டிக்கேக்க தகுதி இல்லையா தைரியம் இல்லையா இல்லையென்றால் அதிகாரம் இல்லையா ?
ஆறுமுகன் தொண்டமான் தட்போது மௌனம் காக்கலாம் ஆனால் வரலாற்றை மறக்க முடியாது அவர் அதிகாரத்தில் இருக்கும் போது இவ்வாறு நடந்திருந்தால் அந்த இடத்திற்கு சென்று நான் இருக்கிறேன் முடிந்தால் உடைத்துப்பார் என்றிருப்பார் அது உண்மை . ஆனாலும் தற்போதுள்ள அரசியல் தலைமைகள் என்ன செய்கின்றன்.
இராதாகிருஸ்னனின் ஆதிக்கத்தில் உள்ள நுவரெலியாவில் இப்படி நடப்பது அவரின் இயலாமையை காட்டுகிறது.
தமிழ் முற்போக்கு கூட்டணி இந்த விடயத்தில் கவனம் செலுத்தியதா?
மலையக தலைமைகளே மாற்றம் மாற்றம் என்றீர்கள் வாக்களித்தோம் மாற்றம் 70 வருட வரலாற்றை கொண்ட ஆலயத்தையே காப்பாற்ற முடியாமல் திண்டாடும் நிலையில் இருப்பது வருந்த தக்கது, தமிழர்களின் வழிபாட்டு தலத்தை அபகரிக்கும் இவர்கள் இன்னும் எதை எதை அபகரிப்பார்கள் என்பதை பொறுத்து இருந்தே பார்க்க வேண்டும்.