நுவரெலியா நானுஓயா பிரதான வீதியில் ஸ்கிராப் தோட்டத்திற்கு அருகாமையில் (31) திங்கட்கிழமை நன் பகல் நடைபெற்ற வாகன விபத்தில் 4 காயங்களுகுள்ளாகி சிகிச்சைக்காக நுவரெலியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.
நுவரெலியா நகரிலிருந்து நானுஓயா பிரதான வீதி வழியாக சென்ற நுவரெலியா மாநகரசபை குப்பை அகற்றும் வாகனம் ஸ்கிராப் தோட்டத்தில் குப்பை அகற்று வதற்காக ஸ்கிராப் தோட்ட சந்தியில் ஸ்கிராப் தோட்ட பாதைக்கு திரும்பிய வேளையில் நானுஓயா பகுதியிலிருந்து நுவரெலியாவை நோக்கி பயணம் செய்த முச்சக்கர வண்டி குப்பை அகற்றும் வாகனத்துடன் மோதுண்டு விபத்துக்குள்ளாகியது.
இதன் போது முச்சக்கர வண்டியில் பிரயாணம் செய்த ஒரு சிறுவர் உட்பட
நான்கு பேருக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளது.இதில் முச்சக்கர வண்டி சாரதிக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ள தாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்ன.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிசார்
மேற்கொண்டுள்ளனர்.
டி சந்ரு